ETV Bharat / sukhibhava

புரதச்சத்தின் அதிக அளவு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் - ஆராய்ச்சியாளர்கள் - புரதம் ப்ரோஸ்டாசின்

புரோஸ்டாசின் என்ற புரதச்சத்தின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

Etv Bharatபுரத சத்தின் அதிக  அளவு நீரிழிவு நோய்க்கு  வழிவகுக்கும்- ஆராய்ச்சியாளர்கள்

author img

By

Published : Aug 7, 2022, 4:49 PM IST

டெல்லி: புரோஸ்டாசின் புரதம் அதிகரிக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கும் எனவும், இதன் விளைவாக புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகையான புரதம் புரோஸ்டாசின் பெரும்பாலும், முக்கியமாக உடலின் மேற்பரப்புகள் மற்றும் உறுப்புகளை வரிசைப்படுத்தும் எபிடெலியல் செல்களில் காணப்படுகிறது.

இந்த புரதம் அதிகம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் இந்நோய் தாக்கும் ஆபத்து உள்ளது என புதிய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இது குறித்த கண்டுபிடிப்புகளின் முடிவுகள் டயபெடாலாஜியா (நீரிழிவு ஆய்வுக்கான ஐரோப்பிய சங்கத்தின் இதழ்) என்ற இதழில் வெளியிடப்பட்டது.

முக்கியமாக ரத்தச் சர்க்கரை, புரோஸ்டாசின் ஆகிய இரண்டின் அளவு அதிகம் கொண்ட நபர்கள் புற்றுநோயால் இறப்பதற்கு அதிக ஆபத்து இருப்பதாக அதிர்ச்சித்தகவல் கண்டுபிடிப்புகளின் மூலம் வெளிவந்துள்ளன. புரோஸ்டாசின் என்பது சோடியத்தின் சமநிலை, ரத்த அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றைக்கட்டுப்படுத்தும். இவை எபிதீலியல், சோடியம் ஆகிய புரத இணைகளின் தூண்டுதலாகும்.

புரதச்சத்தின் அதிக அளவு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் - ஆராய்ச்சியாளர்கள்

மேலும், புரோஸ்டாசின் ஹைப்பர் கிளைசீமியாவை (உயர் ரத்த சர்க்கரை) தூண்டப்பட்ட கட்டி வளர்ச்சியை கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இவை குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையது. இருப்பினும், புரோஸ்டாசின், நீரிழிவு மற்றும் புற்றுநோய் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப்பற்றி அதிகம் அறியப்படவில்லை.

இதையும் படிங்க:பாலியல் ரீதியாக பரவுமா குரங்கு அம்மை நோய்...? உலக சுகாதார அமைப்பின் விளக்கம்...

For All Latest Updates

TAGGED:

Diabetologia
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.