ETV Bharat / sukhibhava

How to whiten your teeth naturally: பற்கள் மஞ்சளா இருக்கா? கரை இருக்கா? முத்துப்போன்ற பற்களைப் பெற இதை ட்ரை பண்ணுங்க.!

நம்மில் பலருக்குப் பற்களை என்னதான் தேய்த்தாலும் மஞ்சள் நிறத்திலும், கரையுடனும் இருக்கும்.. அதை முழுமையாக அகற்றி வெண்மையான பற்களை இயற்கையாகப் பெறலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 8:27 PM IST

சென்னை: பற்கள் முகத்தின் அழகை மெருகூட்டும் என்றால் அது மிகையாகாது. முத்தைபோன்ற பற்கள் வேண்டும் என்பது பலருக்குக் கனவாக இருக்கிறது. சிலருக்குப் பற்கள் இயற்கையாகவே வெண்மையாகவும், வரிசையாகவும் இருக்கும். ஆனால் பலருக்குப் பற்கள் மஞ்சள் நிறத்திலோ, பழுப்பு நிறத்திலோ அல்லது கரையுடனோ காணப்படும். இவர்கள் பொதுவெளியில் வாய் திறந்து சிரிக்கக் கூட தயக்கம் கொள்வார்கள்.

புகைப்படங்களில் கூட சிரித்தபடி போஸ் கொடுப்பதில் விருப்பம் காண்பிக்க மாட்டார்கள். இதுபோன்ற சூழலில் பலருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்குக் கவலை தரலாம். இவர்களில் பலர் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பற்களை வெண்மையாக்குவதற்காக பல்வேறு சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். இவர்களுக்காகத்தான் இந்த டிப்ஸ்.... முடிந்த வரை முயற்சித்துப் பாருங்கள்.. இயற்கையாகக் கிடைக்கும் அழகையும், வெண்மையான பற்களையும் பெறுங்கள்.

உப்பால் பற்களை வெண்மையாக்குங்கள்: 'உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா' என்ற விளம்பரங்களைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். அப்போதே நாம் உணர்ந்திருக்க வேண்டும் பற்களின் நலனுக்கும், அழகுக்கும், உப்புக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதை. உப்பு பொதுவாக ஒரு ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது வாய்வழி சுகாதாரத்திற்கு மிகவும் சிறந்ததாக உள்ளது. அது மட்டும் இன்றி உப்பு கொண்டு பற்களைத் தேய்க்கும்போது பற்கள் வெண்மை பெறும் என்பது உறுதி.

பயன்படுத்தும் முறை: ஒரு டேபிள் ஸ்பூன் உப்பைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பு கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து விட்டு, இந்த உப்பால் உங்கள் பற்களைக் கைவிரல்கள் கொண்டு மென்மையாகத் தேய்த்துக்கொடுங்கள். 1 முதல் இரண்டு நிமிடம் தேய்த்துவிட்டு வாயைக் கழுவி விடுங்கள். இதை நீங்கள் அன்றாடம் செய்து வரும்போது உங்கள் பற்கள் வெண்மையடையும். குறிப்பு: கல் உப்பைப் பயன்படுத்தக்கூடாது.

தேங்காய் எண்ணெய் கொண்டு வாயைச் சுத்தம் செய்யுங்கள்: தேங்காய் எண்ணெய் இந்திய ஆயுர்வேத மருத்துவத்தின் கூற்றுப்படி பற்களின் வெண்மைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறப்பானது எனக் கூறப்படுகிறது. தேங்காய் எண்ணெயில், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பல் சொத்தை மற்றும் அதனால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும்.

பயன்படுத்தும் முறை: இரண்டு டீ ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். அதை உங்கள் வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உள்ளேயே வைத்துச் சுழற்றிக்கொண்டே இருங்கள். அதன் பிறகு அதைக் கீழே துப்பிவிட்டு வாயைக் கழுவிக்கொள்ளுங்கள். இதை நீங்கள் அன்றாடம் மேற்கொள்ளும்போது உங்கள் பற்களில் உள்ள கரை மற்றும் அழுக்குகள் கரைந்து எண்ணெயுடன் கலந்து வெளியேற்றப்படும் அப்போது உங்கள் பற்கள் வெண்மையடையும். இதைச் செய்த பிறகு உப்பால் பற்களைத் தேய்த்து வாய் கொப்பளிப்பதும் சிறந்ததுதான்.

பற்களை வெண்மையாக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்: இதை நீங்கள் இயற்கையான மவுத்வாஷாகப் பயன்படுத்தலாம். வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தவும், பற்களை வெண்மையாக்கவும் இந்த ஆப்பிள் சிடர் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டும் இன்றி இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இதை நீங்கள் வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தினாலேபோதும். நாள்தோறும் பயன்படுத்தினால், இதில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தன்மை உங்கள் பற்களைக் கொஞ்சம், கொஞ்சமாக அறித்துவிடும்.

பயன்படுத்தும் முறை: ஆப்பிள் சிடர் வினிகர் கொஞ்சம் எடுத்து அதைத் தண்ணீரில் கலந்து உங்கள் வாயில் ஊற்றி சுமார் 30 வினாடிகள் வாயிலேயே வைத்திருங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு வாயை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள்.

கரிப்பொடியும், பற்களின் வெண்மையும்: கிராமங்களில் இன்றும் பயன்படுத்தப்படும் பல்பொடி கரிக் கட்டைப் பொடி, உமிப்போடி உள்ளிட்டவைதான். இவை பற்கள் வெண்மை அடைய மிகுந்த பங்களிக்கிறது. ஆனால் உமிப்பொடியை நீங்கள் நாள்தோறும் பல்பொடியாகப் பயன்படுத்தலாம். கரிக்கட்டையை வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தினால்போதும். இதை அதிகம் பயன்படுத்தினால் பல் தேய்மானம் ஏற்படலாம்.

பயன்படுத்தும் முறை: இந்த கரிக்கட்டையைப் பொடித்து கொஞ்சம் தண்ணீரில் கலந்து பற்களில் தேயுங்கள். அதன் பிறகு தண்ணீர் கொண்டு வாயைக் கழுவுங்கள். இதை நீங்கள் செய்யும்போது பற்களில் உள்ள கரைகள் கொஞ்சம், கொஞ்சமாகச் சுத்தமாவதை நீங்கள் கண்கூடப்பார்க்கலாம்.

சோடா உப்பால் வெண்மையாகும் பற்கள்: சோடா உப்பு உங்கள் பற்கள் வெண்மையாவதை உறுதி செய்கிறது. சோடா உப்பைப் பயன்படுத்தி பேஸ்ட் தயார் செய்யுங்கள். அதன் மூலம் பல்துலக்கி பற்களை வெண்மையாக்குங்கள். சிராய்ப்பு தன்மை கொண்ட இந்த சோடா உப்பு பேஸ்ட் மூலம் நீங்கள் பல் துலக்கும்போது, உணவு, புகையில் உள்ளிட்ட பலவற்றால் ஏற்படும் கரையைப் பல்லில் இருந்து அகற்ற உதவுகிறது.

பயன்படுத்தும் முறை: ஒரு டீ ஸ்பூன் அளவுக்குச் சோடா உப்பை எடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கலக்கி பேஸ்ட் போன்ற வடிவத்தில் தயார் செய்யுங்கள். அந்த பேஸ்டை ஒரு காட்டன் துணியிலோ, காட்டன் பஞ்சியோ அல்லது உங்கள் பிரஷிலோ வைத்து பற்களில் மெதுவாகத் தேய்த்துக்கொடுங்கள். இதேபோன்று வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்: How to have sex during pregnancy: கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? கூடாதா? தம்பதிகளின் சந்தேகத்திற்கு, நிபுணர்களின் பதில் இங்கே.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.