ஹைதராபாத்: நம் உடல் ஆரோக்கியத்தில், பால் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பிறந்த குழந்தைக்கு முதலில் புகட்டுவது பால் தான். அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பால் பெரிதும் உதவுகிறது. பாலில் அதிகளவு விட்டமின் டி மற்றும் கால்சியம் இருப்பதால், எலும்பை வலுவாக்குவதற்கு உதவுகிறது. அதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு தினமும் 1 டம்ளர் பால் கொடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுவர்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுதல் நல்லதா?: பசும் பாலில் அதிகளவு புரதம், கால்சியம், விட்டமின் பி மற்றும் விட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பசும் பாலை பருகுவதால் இயற்கையிலேயே நமக்கு, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மனிதர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விஷயங்களை பின்பற்றி வருவர். அந்த வகையில் சிலர், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பால் பருகுவர். அவ்வாறு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பால் பருகுவது நல்லப் பழக்கம் தானா என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவதை பார்க்கலாமா..
செரிமான கோளாறை ஏற்படுத்துமா?: பாலில் கால்சியம் மட்டுமின்றி லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை உள்ளதால் தூக்கத்தை தடுக்கும். இதனால் இரவில் பால் பருகும் போது நமக்கு தூக்கம் வராது. இரவில் உடலின் செயல்பாடு வெகுவாகக் குறைந்திருப்பதால் தான் இரவு உணவு செரிமானம் ஆகாமல், செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அதனால் தான் இரவு உணவை, ஒரு பிச்சைக்காரன் போல் உண்ண வேண்டும் என்று கூறுவர். பால் பருகுவதால் செரிமான கோளாறை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குளிர்ந்த பால் பருகலாமா?: ஏற்கனவே செரிமான கோளாறு இருப்பவர்கள் இரவில் பால் பருகினால், உணவு நன்கு செரிமானமாகாமல் நாளாடைவில் மலச்சிக்கலையும் உருவாக்கும். ஆகவே செரிமான கோளாறு இருப்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள், இரவில் பால் பருகுவதை அறவே தவிர்க்க வேண்டும். இரவில் பால் பருகுவது கல்லீரல் பிரச்சினையையும் உண்டாக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நம்மில் பலர், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு குளிர்ந்த பாலை பருகி வருகின்றனர்.
கொழுப்பு இல்லாத பால் பருகலாமா?: அவ்வாறு பருகினால் உடல்நலம் பாதிப்படையும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். பாலில் அதிகளவு கலோரிகள் இருப்பதால், உடல் எடையை அதிகரிப்பதற்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பாலை பருகலாம்.
உடற்பயிற்சி முக்கியம்: மேலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் நன்கு உடற்பயிற்சி செய்து, உடலில் உள்ள கலோரிகளை குறைக்கலாம். பாலில் பல்வேறு நன்மைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆகவே உங்கள் உடலின் நிலையை கருத்தில் கொண்டு, பால் போன்ற வலுவான உணவை இரவில் எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது.
இதையும் படிங்க: உடல் எடையைக் குறைக்க சிரமப்படுகிறீர்களா? அப்போ இதைத் தெரிந்துகொள்ளுங்கள்!