ETV Bharat / sukhibhava

ஞாபக மறதி அல்சைமர் நோயின் அறிகுறியா? - ஞாபக மறதி

உடல் எடை இழப்பு, தோல் தொற்று, விழுங்குவதில் சிரமம் போன்றவைகள் அல்சைமர் நோயின் அறிகுறிகள் என்பது தெரியும். ஞாபக மறதி அல்சைமர் நோயின் அறிகுறியா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஞாபக மறதி அல்சைமர் நோயின் அறிகுறியா?
ஞாபக மறதி அல்சைமர் நோயின் அறிகுறியா?
author img

By

Published : Oct 21, 2021, 5:35 PM IST

ஹைதராபாத்: ஞாபக மறதி பெரும்பாலும் முதியவர்களுடன் தொடர்புடையது. இன்று அதிகமான இளைஞர்களுக்கு விஷயங்களை நினைவில் கொள்வதில் சிக்கல் உள்ளது. இவை அனைத்தும் அல்சைமர் (Alzheimer’s) நோயின் அறிகுறியா? என்றால் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

அல்சைமர் நோய் என்றால் என்ன?

அல்சைமர் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவித கோளாறு. இது மூளையை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட நபர்களின் நியாபக சக்தி குறைகிறது. அவர்களால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. இந்த நோய் முதுமை பருவத்தில் பலருக்கு வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பொருள்கள் மற்றும் முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் அடைகின்றனர்.

அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்?

பெரும்பாலும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் அல்சைமர் நோய் ஏற்படக்கூடும். மரபணு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.

இளைஞர்களுக்கு தாக்க வாய்ப்புள்ளதா?

மருத்துவர்களின் கருத்துப்படி, இளைஞர்கள் விஷயங்களை மறந்துவிடுவதற்கு பல விஷயங்கள் உள்ளன. தூக்கமின்மை, செல்போன் பார்த்தல், ஒழுங்கற்ற உணவு உட்கொள்ளல் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகள் ஆகியவை இதில் அடங்கும்.

இவைகள் அல்சைமர் நோயின் அறிகுறியாக இல்லாவிட்டாலும், மேலே குறிப்பிடப்பட்ட விஷயங்கள் தொடர்ந்தால் மறதி அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் பிரேம் நாகநாத் நரசிம்மன் கூறினார்.

மேலும் அவர் வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல், நல்ல தூக்கம், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்தால் மறதி வராமல் தடுக்கலாம் என்றார்.

மறதி என்பது மட்டும் அல்சைமர் நோயின் அறிகுறி அல்ல. உடல் எடை இழப்பு, தோல் தொற்று, விழுங்குவதில் சிரமம் போன்றவைகளும் அல்சைமர் நோயின் அறிகுறிகள் என ஏ.கே. இந்திய முதுகெலும்பு காயங்கள் மையத்தின் மூத்த ஆலோசகரும் நரம்பியல் சேவையின் தலைவருமான டாக்டர் சஹானி கூறினார்.

அல்சைமர் நோயை எவ்வாறு தடுப்பது?

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து போன்றவற்றை கட்டுப்படுத்தினால் இந்நோய் வராமல் தடுக்கலாம்.

அல்சைமர் நோய்க்கான சிகிச்சைகள்?

அல்சைமர் நோய்க்கு எந்தவித சிகிச்சையும் இல்லை. இருப்பினும் மருத்துவர்கள் சில மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

ஞாபக மறதிக்கு வழிவகுக்கும் கரோனா

இப்படி இருக்க கரோனா தொற்றும் அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: எலும்பு மெலிதல் நோய் தினம்: ஏன், எதனால், என்ன செய்யலாம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.