ETV Bharat / sukhibhava

கர்ப்பிணிகளே ஓட்ஸ் சாப்பிடுங்க! - டாலியா

ஓட்ஸ் சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஓட்ஸை தொடர்ந்து உட்கொள்வதால், பெண்ணின் சோர்வு மற்றும் பலவீனம் குறைகிறது. மேலும், ஓட்ஸ் உணவுகள் ஜீரணிக்க எளிதானது மட்டுமின்றி, இது ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. குறிப்பாக, காலை உணவில் இதை உட்கொள்வது, நாள் முழுவதும் உடலில் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது.

Dalia
Dalia
author img

By

Published : Jan 10, 2022, 7:54 PM IST

ஹைதராபாத் : உங்களுக்கு வயிற்றில் ஏதேனும் கோளாறு, காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தாலும், ஓட்ஸ் அல்லது ‘டாலியா’ சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

ஓட்ஸ் உணவுகள் ஜீரணிக்க எளிதானது மட்டுமின்றி, இது ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. இதனை நீங்கள் இனிப்பு மற்றும் காரம் என பல வழிகளில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

டாலியா, ஓட்ஸ் உணவுகள்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் சில நன்மைகள் இங்கே உள்ளன. இந்தியாவில் பொதுவாக டாலியா என்று அழைக்கப்படும் ஓட்ஸ், நோய்வாய்ப்பட்டவர்களின் உணவாகும் என்ற பொதுவான தவறான கருத்து மக்களிடையே உள்ளது.

ஆனால் அது ஆரோக்கியமானவர்களுக்கும் ஏற்றது என்பதை அவர்கள் அறியவில்லை. இது குறித்து, மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான மருத்துவர் நடாஷா ஷக்யா விளக்கினார்.

அப்போது, “பொதுவாக டாலியாவில் எந்தத் தானியத்தைப் பயன்படுத்தினாலும், அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதனை வழக்கமாக உட்கொண்டால் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறிப்பாக, காலை உணவில் இதை உட்கொள்வது, நாள் முழுவதும் உடலில் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது” என்றார்.

என்னென்ன நன்மைகள்

டாலியா, ஓட்ஸ் உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் நடாஷா குறிப்பிடுவதை பார்க்கலாம்.

  • எடை இழப்பு

தினமும் ஒரு கிண்ணம் டாலியா சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் அதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் கலோரிகள் குறைவாக உள்ளன. மேலும், ஓட்மீலில் உள்ள புரதம் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும், இது பசியைக் குறைக்கிறது மற்றும் எடையை மேலும் குறைக்கிறது.

  • செரிமான ஆரோக்கியம்

அதிக நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகள் ஏற்படாது. ஜீரணிக்க சிறிது நேரம் எடுத்தாலும், நமது செரிமான அமைப்பு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. அதனால்தான் வயதானவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாலியாவை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். வயிற்றுவலி, வாயு, வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது.மேலும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.

Dalia: An ideal food for all age groups
கர்ப்பிணிகளே ஓட்ஸ் சாப்பிடுங்க!
  • இரத்த சோகை

ஓட்ஸ் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபினை பராமரிக்க உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கும், இது சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. ஓட்மீலைத் தொடர்ந்து உட்கொள்வது இத்தகைய பிரச்சினைகளைத் தடுத்து, இரத்த சோகைக்கு நிவாரணம் அளிக்கும்.

  • நீரிழிவு நோய்

இது மெக்னீசியத்தின் வளமான ஆதாரமாகவும் உள்ளது. மெக்னீசியம் பல வகையான நொதிகளை உற்பத்தி செய்கிறது, இது உடலில் சரியான அளவு இன்சுலின் உற்பத்திக்கு மேலும் உதவுகிறது. இது தவிர, டாலியா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக அமைகிறது.

  • எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் ஓட்மீலில் ஏராளமாக உள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே, வயதானவர்கள் இதை தினமும் உட்கொண்டால், எலும்பு பலவீனம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு குறைவு. மேலும், குழந்தைகள் இதை உட்கொள்வது அவர்களின் எலும்புகளின் சரியான வளர்ச்சிக்கு உதவுகிறது.

  • கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

ஓட்மீலில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே, இதனை உட்கொள்வது உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதோடு இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

  • வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது

ஓட்ஸ் பி வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாக அமைகிறது. 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

  • கர்ப்பிணி பெண்களுக்கு..

ஓட்ஸ் சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஓட்ஸை தொடர்ந்து உட்கொள்வதால், பெண்ணின் சோர்வு மற்றும் பலவீனம் குறைகிறது, அத்துடன் கருப்பையில் உள்ள குழந்தையின் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இதையும் படிங்க : சாதாரண சளியா? ஒமைக்ரானா? அறிகுறிகள் சொல்வதென்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.