பிராமி
பிராமியை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்யும். மேலும் தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும். இதுபோன்று உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு பிராமி தீர்வளிக்கிறது. பிராமி மூளை மற்றும் உடலில் நரம்பு சம்பந்தமான நோய்களைத் தடுத்து மூளைப்புறணி கூர்மையாக செயல்படுவதற்கு உதவுகிறது.
அஸ்வகந்தா
ஆயுர்வேத சிகிச்சையில் அஸ்வகந்தா பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், நரம்புகளைப் பாதுகாக்கவும், கருவுறுதலை மேம்படுத்தவும், இதய நோய்களைத் தடுக்கவும், கண்புரைக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
காயங்களை குணப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவும் உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கிறது. இதை வீட்டில் எளிதாகப் பயன்படுத்தலாம்.
துளசி
ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் துளசி வளர்க்கப்படுகிறது. இதை வீட்டில் எளிதாக வளர்க்கலாம். ராம் துளசி, காட்டு வன துளசி, கிருஷ்ண துளசி, கற்பூரத் துளசி என நான்கு வகையான துளசி வகைகள் உள்ளன.
துளசியில் கிருமிநாசினி, பூஞ்சைக் கொல்லி, பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டிபயாடிக் குணங்கள் உள்ளன. இவை காய்ச்சல், ஜலதோஷம், சுவாசக் கோளாறுகளைக் குணப்படுத்த உதவுகிறது.
எலுமிச்சை புல் (Lemongrass)
இதில் ஏராளமான மருத்துவப் பலன்கள் உள்ளன. தேநீர் தவிர, நீங்கள் சாலட்டுகள், சூப்கள், பிற உணவுகளில் எலுமிச்சைப் புல் சேர்க்கலாம். இது ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் பயன்படுகிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இது தவிர, தொண்டைப் புண், தொற்று, வயிற்று வலி, தலைவலி, மூட்டு வலி, தசை வலி, செரிமான மண்டலத்தின் பிடிப்பு, தசைப் பிடிப்பு, சுவாச பிரச்னைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
கற்றாழை (Aloe Vera)
மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை எளிதில் எங்கும் வளரக்கூடியது. இதை வளர்க்க மெனக்கெடத் தேவையில்லை. கற்றாழையை வளர்த்தால் கொசுக்கள் தொல்லை இருக்காது.
அழகு நன்மைகளுக்கும் பயன்படுத்தலாம். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் கற்றாழையை உட்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
புதினா
புதினாவை எந்த சூழலிலும் வளர்க்கலாம். சிறிய பானையிலும்கூட எளிதாக வளர்க்கலாம். இதன் இலைகள் தசைகள், வீக்கம், வயிறு கோளாறு, காய்ச்சல், ஸ்பாஸ்டிக் பெருங்குடல், குடல் பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கப் பயன்படுகிறது.
இது பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இது ஒரு வாய் புத்துணர்ச்சியாகவும் பயன்படுத்தப்படலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் எளிதாக வளர்க்கலாம். கறிவேப்பிலை சிறந்த ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இதை தோல் மற்றும் முடி இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க : தினமும் 7,000 அடி நடந்தால் எமனும் அஞ்சுவான்