ETV Bharat / sukhibhava

கோடைக்காலத்தில் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த 10 டிப்ஸ்

கோடைக்காலத்தில் வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை 10 எளிய வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். அதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

கோடைக்காலத்தில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை கடுப்படுத்த 10 டிப்ஸ்

author img

By

Published : Mar 3, 2023, 3:50 PM IST

Updated : Mar 5, 2023, 5:08 PM IST

கோடைக்காலத்தில் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியமாகும். சொல்லப்போனால், வெயில் காரணமாக ஏற்படும் வியர்வையால் பலருக்கு உடலில் துர்நாற்றம் ஏற்படுவது வழக்கம். இந்த துர்நாற்றம் உங்களை அசௌகரியமாக உணர வைக்கும். இதற்காக பர்பியூம், பவுடர்கள், எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தி வந்திருக்கலாம். இருப்பினும், வியர்வை குறைந்திருக்காது. ஆகவே, பின்வரும் 10 எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.

1. ஒரு நாளைக்கு 2 முறை குளியல்: அதிக வியர்வை பலருக்கு ஏற்படுவதில்லை. சிலருக்கு மட்டுமே ஏற்படும். அவர்கள் ஒரு நாளைக்கு 2 முறை குளிக்கலாம். இது கோடைக்காலங்களில் உடலை குளிர்விப்பது மட்டுமல்லாமல், துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்தும்.

2. குளியலுக்கு பின் செய்யவேண்டியது: குளித்த பின்போ அல்லது ஆடைகளை அணிவதற்கு முன்போ உடலில் ஏற்பட்ட வியர்வை துண்டை பயன்படுத்தி முழுமையாக துடைக்க வேண்டும். இல்லையென்றால், ஈரம்படாத ஆடைகளில் வியர்வை எளிதாக பரவிவிடும். துர்நாற்றத்துக்கும் வழிவகுக்கும்.

3. தேவையற்ற முடிகளை அகற்றவும்: சிலர் ஸ்லீவ்லெஸ் அணிவது வியர்வையை குறைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், முழுக் கை சட்டைகளை அணிந்தாலும், ஸ்லீவ்லெஸ் அணிந்தாலும் வியர்வை துர்நாற்றம் வீசும். ஆகவே, அண்டர் ஹார்ம் முடிகளை அடிக்கடி அகற்ற வேண்டும்.

4. பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்பாடு: கோடைக்காலங்களில் வியர்வையால் அரிப்பு ஏற்படும். இது பாக்டீரியாவால் உருவாகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே, பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும். இந்த சோப்புகள் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்.

5. எண்ணெய்கள் பயன்பாடு: லாவெண்டர், மிளகுக்கீரை, பைன் எண்ணெய்களை குளித்த உடன் லேசாக உடலில் பூசிக்கொள்வது, உடல் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும். இது நீண்ட நேரம் உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

6. எலுமிச்சை பயன்படுத்துதல்: அதிக துர்நாற்றம் வீசும் உடல் பகுதிகளில் எலுமிச்சையைத் தேய்த்தால் நாற்றத்தை குறைக்கலாம். ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு எழுமிச்சையை பிழிந்துவிட்டு பின்பு குளித்தால் துர்நாற்றம் குறையும்.

7. கோடைக்கு ஏற்ற உணவுகளை உண்ணுதல்: எண்ணெய் அல்லது வறுத்த உணவுகள் மற்றும் மிக காரமான உணவுகள் அதிக வியர்வைக்கு முக்கிய காரணமாகும். ஆகவே, இவற்றை குறைத்துக்கொள்வது நல்லது.

8. காலணிகள் மற்றும் ஆடைகள் பயன்படுத்தல்: நைலான் அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட நூல்களில் செய்யப்பட்ட ஆடைகள் வியர்வையைத் தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவற்றை கோடையில் தவிர்ப்பது நல்லது. உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை விரைவில் ஆவியாக உதவும் காட்டன் ஆடைகளை அணியுங்கள். குறிப்பாக காட்டன் சாக்ஸ் பயன்படுத்துங்கள்.

9. டியோடரண்ட் பயன்பாடு: ஒரு டியோடரண்ட் வியர்வையின் நாற்றத்தை மறைக்கிறது. இது வியர்வை உடன் கலந்து அசௌகரியமாக நாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, ஆன்டிஸ்பெர்ஸ்பிரண்ட் உடன் டியோடரன்ட் பயன்படுத்தலாம்.

10. வினிகர் பயன்பாடு: தோலின் pH அளவை கட்டுப்பாட்டில் வைக்க வினிகர் உதவுவதால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கவும் இது சிறப்பாக பயனளிக்கும். ஆகவே, உடலில் வினிகரை தேய்த்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு?

Last Updated : Mar 5, 2023, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.