விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பவானி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சரியாக பணிக்கு வருவதில்லை எனவும், தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சரிவர செய்வதில்லை எனவும்கூறி, கடந்த மாதம் பவானியை மேலாளரான மல்லிகா ஒரு மாத காலம் பணி இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஏப்.22) விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த இளநிலை உதவியாளர் பவானி தகாத வார்த்தையில் நகராட்சி அலுவலகத்திற்குள் நின்று சத்தமிட்டவாறு, மேலாளர் மல்லிகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நகராட்சி மேலாளரை தகாத வார்த்தையில் பேசியதோடு மாவட்ட ஆட்சியரை தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது அப்பகுதியில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரசாங்க ஊழியராக இருந்துகொண்டு ஒரு மாவட்டத்தின் ஆட்சியரை தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு.. பதறவைக்கும் பட்டப்பகல் காட்சிகள்...