கரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், பம்ப் ஆப்பரேட்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தம் 95 நபர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கியப் பின், அவர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் மதிய உணவு உட்கொண்டார்.
இதையும் படிங்க: கரோனா வாரியர்ஸ்ஸூக்கு அட்சதை தூவி கவுரவித்த மணல்மேடு பேரூராட்சி!