ETV Bharat / state

பட்டாசு திரி தயாரித்தபோது வெடி விபத்து - பெண் படுகாயம் - virudhunagar district news

விருதுநகர் : சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு திரி தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் 80% தீ காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

virudhunagar Explosion while making firecracker string

author img

By

Published : Oct 3, 2020, 9:56 AM IST

சூலக்கரை சத்திய சாய் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி சித்ராதேவி (33).நேற்று (அக்.02) இரவு வீட்டில் தனியாக இருந்த சித்ராதேவி பட்டாசு திரி தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சித்ராதேவிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் சித்ரா தேவியை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 80% தீக்காயமடைந்த சித்ரா தேவி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சூலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

கருவிழி மாற்று அறுவை சிகிச்சை: மதுரை அரசு இராசாசி மருத்துவமனை சாதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.