விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் அரசு அலுவலர்களுடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றமல் இருந்தனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது மாவட்ட ஆட்சியர் கண்ணன் கண் அயர்ந்தார். இதனை கண்ட மற்ற அரசு அலுவலர்களும் செல்போன்களை பார்த்துக் கொண்டும், அருகில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டும் இருந்தனர். அலுவலர்களின் இந்த செயல்களால் இவ்வாய்வுக்கூட்டம் கண் துடைப்பிற்காக நடைபெற்றதா என்ற கேள்வியெழுப்பியுள்ளது.
முன்னதாக ஆய்வுக்கூட்டத்திற்கு வந்த அமைச்சரை வரவேற்க திமுக தொண்டர்கள் நகராட்சி அலுவலகத்தின் முன்பு மிக பெரிய வரவேற்பு பேனர்களையும், வளைவுகளையும் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.