விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டமன்ற அரங்கில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
"10 கோவிட் கமாண்டர்கள் இன்று (ஏப்ரல் 10) முதல் முழுவீச்சில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தை நிறுத்த ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
மருத்துவ உபகரணங்கள், தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது
கரோனா பரவல் அதிகமானால், அதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது
இதுவரை மாவட்டத்தில் திருச்சுழி அருகே வீரசோழன் என்ற ஊர் மட்டும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலையம் வேண்டி காவனூர் புதுச்சேரியில் உழவர்கள் சாலை மறியல்