விருதுநகரில் சமூக நலத்துறை மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சமூக நலத்துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை வகித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தேவைப்படும் ஆலோசனைகள் வழங்கப்படும் முறை குறித்து இந்த கருத்தரங்கில் எடுத்துக் கூறப்பட்டது.
அதேபோன்று, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளைப் பற்றி சமூக நலத்துறைக்கு தெரிவிக்க '181' என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை பயன்படுத்தக் கருத்தரங்கில் பங்குபெற்றவர்க்கு எடுத்துக் கூறப்பட்டது.
இதில், கூரைக் குண்டு பகுதியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களை சமூகநலத் துறை அலுவலர்களிடம்‘ கேட்டுப் பெற்றுக் கொண்டனர்.