விருதுநகர் - மதுரை சாலையில் இயங்கி வரும் தனியார் பாரில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனியார் பாருக்குச் சென்ற காவல் துறையினர், அங்கு சோதனை நடத்தினர். சோதனையில், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவர, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 80 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அங்கு பணியில் இருந்த காந்திராஜன், வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த 18 ஆயிரத்து 300 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் இருந்து நெல்லைக்கு கடத்திவந்த 180 மது பாட்டில்கள் பறிமுதல்: இரண்டு பேர் கைது