விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியில் இசக்கிமுத்து என்பவர், மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வசித்துவந்தார். இந்நிலையில், கட்டட வேலைக்குச் சென்ற இசக்கிமுத்து, ஜூன் 5ஆம் தேதி வீட்டின் அருகிலிருந்த கண்மாய் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவந்தனர்.
கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது! - முன்விரோத கொலை
விருதுநகர்: ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.