ETV Bharat / state

அரசு மருத்துவர்களின் அலட்சியம் : சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் - accident

விருதுநகர் : பாவாலியைச் சேர்ந்த கல்லூரி மாணவரின் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்களின் அலட்சியம் : சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
author img

By

Published : Aug 7, 2019, 6:40 PM IST

விருதுநகர் மாவட்டம் பாவாலியைச் சேர்ந்தவர், கல்லூரி மாணவர் ரவிச்சந்திரன் (18). இவர் இன்று காலை 8 மணியளவில் பாவாலியில் இருந்து விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் உடலை உடற்கூறாய்வுகாக அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் காலையில் கொண்டு செல்லப்பட்ட உடல் மாலை வரை உடற்கூறாய்வு செய்யாமல் பிணவறையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து உறவினர்கள் மருத்துவமனையை அணுகியபோது மருத்துவர்கள் இல்லை எனவும் அவர்கள் வேறு வேலையாக உள்ளார்கள் எனவும் அலட்சியமாக பதிலளித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

Intro:விருதுநகர்
07-08-19

மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலை மறியல்
Body:விருதுநகர் மாவட்டம் பாவாலியை சேர்ந்த கல்லூரி மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம் பாவாலியைச் சேர்ந்த பாண்டியன் (40) மகன் ரவிச்சந்திரன் (18) கல்லூரி இறுதி ஆண்டு பயின்று வருகிறார் இன்று காலை 8 மணியளவில் பாவாலியில் இருந்து விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது அங்கிருந்து விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் காலையில் கொண்டு செல்லப்பட்ட உடல் மாலை வரை பிரேத பரிசோதனை செய்யாமல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உறவினர்கள் மருத்துவமனையை அணுகியபோது மருத்துவர்கள் இல்லை எனவும் அவர்கள் வேறு வேலையாக உள்ளார்கள் எனவும் பதிலளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் இதை அறிந்த காவல்துறை பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரேத பரிசோதனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது மேலும் விருதுநகர் அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவசர சிகிச்சை பிரிவில் கூட பொதுமக்களுக்கு தாமதமாகவே சிகிச்சை அளிக்கின்றனர் மேலும் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியப் படுத்தப் படுவதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் மருத்துவ இயக்குனரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பேட்டி : மாரீஸ்வரன்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.