விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது தரை மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள், பௌர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாள்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
தற்போது பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி முதல் இன்று (பிப்.27) வரை மொத்தம் 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது.
பௌர்ணமி பூஜை நேற்று (பிப்.26) முடிவடைந்த நிலையில், 4ஆவது நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்ற மார்கழி பௌர்ணமி பூஜை ரத்து