ETV Bharat / state

பல கடைகளில் தீ விபத்து! - srivilliputhur

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஒரு கடையில் பற்றிய தீ மளமளவென பக்கத்துக் கடைகளுக்கும் பரவியதால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து
author img

By

Published : May 29, 2019, 1:25 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடி அருகே செயல்பட்டு வரும் திருப்பதி என்பவரது டீக்கடையில் பற்றிய தீ, அருகில் உள்ள பழக்கடை, மருந்தகம், உணவகம் என ஐந்தாறு கடைகளுக்கும் பரவியது.

தீ விபத்து

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நேர்ந்ததா? அல்லது யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்
29-05-19

ஸ்ரீவில்லிபுத்தூரில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தால் லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 6 க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென பயங்கர தீ விபத்து. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ளது வத்திராயிருப்பு தாலுகா .இந்த பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடி அருகே  செயல்பட்டு வரும் திருப்பதி என்பவது டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு பின்பு அருகில் உள்ள பழக்கடைகள், மெடிக்கல், ஹோட்டல் , எலக்ட்ரிக் கடை என 6 க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் தீ மளமளவென பரவி கொழுத்து விட்டு எரிந்தது. பின்பு தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையில் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான  பொருட்கள் எரிந்து சேதமானது.  யாரேனும் தீ வைத்தார்களா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா  என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN_VNR_2_29_STORE_FIRE_ACCIDENT_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.