விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேவுள்ள இராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நூற்பாலை நடத்திவருகிறார். இந்நிலையில் நூற்பாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் நூற்பாலையில் இருந்த நூல்கள், இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
அதன் மதிப்பு சுமார் 15 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனத் தகவல் தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்தத் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வாகனம் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு!