ETV Bharat / state

சதுரகிரி கோயில் அன்னதான மடம் மூடல் - நிர்வாகிகள் ஊழியர்கள் இடையே வாக்குவாதம்!

விருதுநகர்: சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் உள்ள அன்னதான மடத்தை மூடுவதற்கு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

sathuragiri
author img

By

Published : Sep 7, 2019, 5:09 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது.

இக்கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இக்கோயிலில் 15க்கும் மேற்பட்ட அன்னதான மடங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பது உள்ளிட்ட சுகாதாரக் காரணங்களைக் கூறி அனைத்து அன்னதான மடங்களையும் மூடச் சொல்லி அறநிலையத்துறௌ உத்தரவிட்டது. அதன்படி அனைத்து அன்னதான மடங்களும் மூடப்பட்டு, ஒரேயொரு அன்னதான மடம் மட்டும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இயங்கி வந்தது. தற்போது அதனையும் மூடச் சொல்லி கோயில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் மடத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நிர்வாகிகள் ஊழியர்கள் வாக்குவாதம்

அன்னதான மடங்கள் மூடப்பட்டிருந்த வேளையில், அங்குள்ள தனியார் உணவு விடுதிகள் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பதாக முன்பு புகார் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:விருதுநகர்
07-09-19

சதுரகிரி கோவில் மலைப்பகுதியில் அன்னதான மடம் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கூடாது - கோவில் நிர்வாகத்திற்கும் மடத்தின் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்

Tn_vnr_01_sathuragiri_Temple_issue_vis_script_7204885Body:சதுரகிரி கோவில் மலைப்பகுதியில் அன்னதான மடம் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கூடாது என கோவில் நிர்வாகம் கூறியதால் கோவில் நிர்வாகத்திற்கும் மடத்தின் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோவில் மலைப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட அன்னதான மடங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கோவில் நிர்வாகம் அன்னதான மடத்தை மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி ஒரே ஒரு அன்னதான மடம் மட்டுமே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வரும் நிலையில் அந்த மடத்தில் இருந்தும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டதால் மடத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.