ETV Bharat / state

ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. மதுரை ஆட்சியர் அறிவிப்பு! - JALLIKATTU APPLICATION

மதுரையில் 2025 ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2025, 6:18 PM IST

மதுரை: 2025 ஆம் ஆண்டிற்கான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் நாளை (ஜனவரி 06) திங்கட்கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறுதல் வேண்டும். அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14,15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில், கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் நாளை ஜனவரி 06 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

மதுரை ஜல்லிக்கட்டு:

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “மதுரை மாவட்டம், தெற்கு வட்டம் அவனியாபுரம் கிராமத்தில் வருகிற ஜனவரி 14 ஆம் தேதியும், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு, அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பம்:

இதனால், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை வருகிற 6ஆம் தேதி மாலை 05.00 முதல் 7 ஆம் தேதி மாலை 05.00 மணி வரையில் பதிவு செய்திட வேண்டும். அதேபோல், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்களும் இதில் பதிவு செய்திடல் வேண்டும்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு போட்டி: வெளியானது அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள்!

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள், ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையின் உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.