ETV Bharat / state

தெருவின் நடுவே சிதிலமடைந்துள்ள கிணற்றை மூட மக்கள் கோரிக்கை - சத்திரப்பட்டி கிணறு பிரச்னை

விருதுநகர்: தெருவின் நடுவே ஆபத்தான முறையில் சிதிலமடைந்து இருக்கும் கிணற்றை மூட வேண்டும் என சத்திரப்பட்டி கிராம மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tn vnr damage well  சத்திரப்பட்டி கிணறு பிரச்னை  sathirapatti well problem
தெருவின் நடுவே சிதைந்த நிலையில் உள்ள கிணறு
author img

By

Published : Feb 2, 2020, 11:36 AM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள ஓ.பி.ஆர் தெருவின் நடுவே பழமையான கிணறு ஒன்று பாழடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தக் கிணறு பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊருக்குக் குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமாக இருந்துள்ளது.

காலப்போக்கில் நீர் வற்றி, கிணறு வறண்டு போனதால் பொதுமக்களும் குப்பைகளைக் கொட்டி, கிணற்றை குப்பைத் தொட்டியாக மாற்றி விட்டனர். மழைக்காலங்களில் மழை நீர் கிணற்றில் நிறைந்து குப்பைகளுடன் சேர்ந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடுகிறது. மேலும், கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறிவிடுகிறது.

தெருவின் நடுவே சிதைந்த நிலையில் உள்ள கிணறு

இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு நோய் தொற்றுகளினால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்கள் சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கிணறு அமைந்திருப்பதால் குழந்தைகளோ அல்லது வாகனத்தில் செல்பவர்களோ கிணற்றுக்குள் விழுந்துவிடுவார்களோ என்று அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே, அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்பே அரசு நடவடிக்கை எடுத்து அந்தக் கிணற்றினை மழை நீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்ற வேண்டும் அல்லது முழுமையாக மண் போட்டு மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: ''புதிய மொந்தையில் பழைய கள்''-தான் மத்திய பட்ஜெட்: விவசாய சங்கத் தலைவர் தெய்வசிகாமணி!

Intro:விருதுநகர்
01-02-2020

ஆபத்தான கிணற்றினால் கிராம மக்கள் அச்சம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Tn_vnr_02_damage_well_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள ஓ.பி.ஆர் தெருவின் நடுவில் கோவிலின் முன்புறம் பழமையான கிணறு ஒன்று பாழடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கிணறு பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஊருக்கே குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தது காலத்தின் கோலத்தால் நீர் வற்றி கிணறு வறண்டு போனது அதற்கு பின் கிணற்றை முறையாக பராமரிக்காத காரணத்தால் பாழடைந்து காணப்படுகிறது. அங்கிருந்த பொதுமக்களும் குப்பைகளை கிணற்றுக்குள் கொட்டி கிணற்றை குப்பைத் தொட்டி ஆக்கி விட்டனர் மழைக் காலங்களில் மழை நீர் கிணற்றில் நிறைந்து குப்பைகளுடன் சேர்ந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடுகிறது. மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி விடுகிறது இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் சிதிலமடைந்து உடைத்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அந்தப் பகுதியில் சென்று வரவே அச்சப்படுகின்றனர். ஊரின் மைய பகுதியில் பாதையின் ஓரத்தில் கோவிலின் முன்புறம் கிணறு அமைந்திருப்பதால் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாக உள்ளது. காலை மாலை வேளைகளில் குழந்தைகள் அதிகம் அங்கு விளையாடும் பகுதியாகும் எனவே குழந்தைகளோ அல்லது வாகனத்தில் செல்பவர்களோ விழுந்து விடுவார்களோ எனும் அச்சம் மிகுதியாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் நடவடிக்கை எடுத்து அந்த கிணற்றை முறையாக பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவோ அல்லது அந்த கிணற்றினை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றியோ அல்லது முழுமையாக கிணற்றினை மண்ணை போட்டு மூடி பாதுகாத்து நடவடிக்கை எடுக்க அரசு மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் ஆவன செய்ய கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.