விருதுநகர்: ரெட்டியாபட்டியிலிருந்து மண்டபசாலை செல்லும் வழியில் பெருமாள்சாமி ஏஜென்சி என்ற பெயரில் தனியார் பெட்ரோல் பங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (செப்.28) இரவு பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த நிலையில், மற்றொருவர் அரிவாளுடன் பங்கிற்கு நுழைந்தபோது, சத்தம் கேட்டு விழித்த ஊழியர்களிடம் அரிவாளைக் காட்டி பணத்தை திருட முயன்றார். மேலும், கட்டிலில் தூங்கிய ஊழியரிடம் அரிவாளை நீட்டியபோதும் ஊழியர் பயப்படாமல் இருந்தார்.
தொடர்ந்து, அங்கிருந்த கட்டிலை தூக்கி கொள்ளையன் மீது வீசவே, அக்கொள்ளையன் பயந்து தயாராக இருந்த தனது கூட்டாளியுடன் தப்பினார். இவையனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதற்கிடையே பெட்ரோல் பங்க் உரிமையாளர் பெருமாள்சாமி, ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ: அத்து மீறிய வழக்கறிஞர் - பெண் டிராபிக் போலீஸ் உடன் தகராறு