தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பலரும் தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியனுக்கு இன்று (ஜூலை 22) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே அவரது மனைவி, மகன்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது இவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான அன்பழகன், கார்த்திகேயன், செங்குட்டுவன், சி.வெ. கணேசன், வசந்த் கார்த்திகேயன், ஆர்.டி.அரசு, கே.எஸ். மஸ்தான் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.