விருதுநகர் மாவட்டத்தில் அரசு பல் மருத்துவக்கலூரி அமைக்கப்படும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். முன்னதாக இப்பல் மருத்துவக்கல்லூரி கட்டடப் பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி தென்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனக் கூறினார்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கட்டபட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தற்போது 80 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையில், இதன் அருகே அரசு பல் மருத்துவக்கல்லூரி அமைக்க வருவாய்த்துறையினர் இடத்தை அறிந்து ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான திட்ட அறிக்கையை பொதுப்பணித்துறையினர் அரசுக்கு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தேர்தல் வருவதற்கு முன்பே அரசு பல் மருத்துவமனை கட்டுவதற்கான பணியை தொடங்கி விடுவோம் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேனி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய ஓ.பி.எஸ்!