ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய தீவிர தேடுதல் வேட்டை - வேலை வாங்கித் தருவதாக மோசடி

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய அமைக்கப்பட்ட ஆறு தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளன.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Dec 20, 2021, 4:40 PM IST

விருதுநகர்: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், அவர் தலைமறைவானதால் அவரைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அவரைக் கைதுசெய்ய காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கேரளா, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களிலும் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட விமான போக்குவரத்து உள்ள பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறது.

மேலும், அவரது உதவியாளர்கள், உறவினர்கள் அவருடன் தொடர்பில் இருந்த 50-க்கும் மேற்பட்டோரில் செல்போன் எண்களை சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்துவருவதாக விருதுநகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனின் நண்பர் - உடந்தையாக இருந்த அண்ணன் தலைமறைவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.