விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகேவுள்ள ஜெகவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி உஷாதேவி (25). இவர் தனது வீட்டின் முன்பு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், உஷா கழுத்திலிருந்த நான்கு சவரன் செயினை பறிக்க முயற்சித்தனர்.
சுதாரித்துக்கொண்ட உஷாதேவி, செயினை பத்திரமாக பிடித்ததால் அரை பவுன் செயின் மட்டும் பறிபோனது. இது குறித்து உஷாதேவி ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 சவரன் நகைகள் கொள்ளை: விலையுயர்ந்த பைக் மூலம் சிக்கிய இளைஞர்!