விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ' குற்றம்சாட்டப்பட்ட நிர்மலாதேவி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, கலைச்செல்வன், தங்கப்பாண்டியன் உள்ளிட்டவர்களுக்காத்தான் கல்லூரி பெண்களை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தன்னிடம் நிர்மலாதேவி தெரிவித்தார்' எனக் கூறினார்.
மேலும், 'கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தினால், நிர்மலா தேவிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி தருவதாகவும், இந்த உண்மையை வெளியே சொன்னால் நிர்மலா தேவியின் மகளை கடத்தி விடுவதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் தரப்பிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. தற்போது நிர்மலா தேவி வாய்மூடி இருப்பதால், வழக்கு நேர்மையாக நடக்காமல் திசை மாற வாய்ப்புள்ளதால் நேர்மைக்கு மாறாக தாம் செயல்பட விரும்பாத காரணத்தால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறேன்' எனக் கூறினார்.
இதையும் படிங்க...இந்தாண்டு கட்சி தொடக்கம் - நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!