விருதுநகர் மாவட்டம் பாத்திமா நகரைச் சேர்ந்த முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக உள்ளார். இவரது வாகனம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. வாகனத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்த முருகன், உடனே தீயை அணைத்தார்
இந்த சம்பவத்தில் வாகனத்தின் சில பாகங்கள் எரிந்து சேதமாயின. இதையடுத்து, இப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கூறி விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.