விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார ஓடை பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக சார் ஆட்சியர் தினேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், ரோந்து பணியில் ஈடுபட்ட சார் ஆட்சியர், போலியான முறையில் அனுமதி சீட்டை தயாரித்து இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டரையும், டிப்பர் லாரியையும் சிறைபிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதனைத்தொடர்ந்து சட்ட விரோதமாக அனுமதி சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து வருவாய் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றிய காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!