ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த திமுக எம்எல்ஏவிற்கு எதிராக அதிமுகவினர் முழக்கம்!

விருதுநகர்: ராஜபாளையம் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமாரை வெளியேற்றக் கூறி அதிமுகவினர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் வாக்கு எண்ணும் மையம் பிரச்னை  திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன்  தென்காசி மக்களவை உறுப்பினர்  ராஜபாளையம் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பிரச்னை  rajapalyam vote counting center problem  rajapalayam vote counting problem
வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த திமுக எம்.எல்.ஏவிற்கு எதிராக அதிமுகவினர் முழக்கம்!
author img

By

Published : Jan 2, 2020, 7:22 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 11.30 மணியளவில் காலதாமதத்துடன் தொடங்கியது. இந்தப்பகுதியில் வெற்றி பெற்றவர்களுடைய நிலவரம் சரியாக அறிவிக்கப்படவில்லை.

ஆகையால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் ராஜபாளையம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமார் ஆகியோர் உள்ளே நுழைந்தனர். இவர்களின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த திமுக எம்எல்ஏவிற்கு எதிராக அதிமுகவினர் முழக்கம்

உடனடியாக ராஜபாளையம் டிஎஸ்பி தலைமையிலான காவலர்கள் நிகழ்வு இடத்திற்கு வந்து அவர்களை வெளியேற்றினர். இதன்பின்னர், பேசிய தங்கபாண்டியன், வெற்றி பெற்ற இடங்களை அறிவிக்காமல் காலதாமதம் செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஈரோட்டில் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு!

Intro:விருதுநகர்
02-01-2020

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் எம்.குமார் வெளியேற்ற சொல்லி அதிமுகவினர் கோஷம் எழுப்பி இருவருக்கும் வாக்குவாதம்.

Tn_vnr_03_election_candidates_issue_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 27ஆம் தேதி பதிவான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 11.30 மணியளவில் கால தாமதமாக தொடங்கியது. இதில் இந்த பகுதியில் உள்ள வெற்றி பெற்றவர்கள் உடைய நிலவரம் சரியாக அறிவிக்கப்படவில்லை. ஆகையால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திமுக தனுஷ் குமார் உள்ளே நுழைந்ததால் அதிமுகவினர் கோஷம் எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இராஜபாளையம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எம்பி தனுஷ் குமார் அவர்களை வெளியேற்றினர்.வெற்றி பெற்ற இடத்தில் வெற்றி அறிவிக்காமல் காலதாமதம் செய்வதாக எம்எல்ஏ குற்றம் சாட்டினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.