விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியைக் கண்டித்து, ஊராட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் ஏழு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பேசுகையில், “ஊராட்சி மன்றத் தலைவர் நிர்வாக முறைகேடு செய்துவருகிறார். கரோனா காலங்களில் நடமாடும் காய்கறி வண்டிகள் இயங்க ரூ. 500 முதல் ஆயிரம் வரை வியாபாரிகளிடம் பணம் பெறுகிறார்.
ஊராட்சி மன்றக் கூட்டத்தில் கணக்கு, வழக்குகள் குறித்து பேசினால், சாதியை உட்புகுத்தி பேசி மிரட்டல் விடுக்கிறார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழலுக்கு அலுவலர்களும் துணை போகின்றனர்” என்றனர்.
இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு