ETV Bharat / state

உணவுக்காக சாலையைக் கடந்த புள்ளிமான் - வாகனம் மோதி உயிரிழப்பு - Western Ghats

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில்  இறந்த புள்ளிமான் குறித்து வாகனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

deer death
deer death
author img

By

Published : Jan 20, 2020, 12:45 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வகையில் மான் வகையைச் சேர்ந்த கடமான், புள்ளி மான்களும் அதிக அளவில் அங்கு காணப்படுகிறது.

இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்றிரவு மான்கள் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து மலைப்பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூன்று வயதுடைய ஆண் புள்ளி மான் மீது மோதியதில், படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் இறந்த புள்ளிமான்

இத்தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அடிபட்டு இறந்துக் கிடந்த புள்ளிமானின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். மேலும் மான் மீது எந்த வாகனம் மோதியது என்பது குறித்தும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'நீருக்காக சாலையைக் கடந்த புள்ளி மான்' - நொடியில் வாகனம் மோதி உயிர் பிரிந்த சோகம்!

Intro:விருதுநகர்
18-01-2020

தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த மூன்று வயது மதிக்க தக்க புள்ளிமான்

Tn_vnr_01_deer_death_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த மூன்று வயது மதிக்க தக்க புள்ளிமான். வானத்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் புலி, சிறுத்தை, கரடி யானை, காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வகையில் மான் வகையைச் சேர்ந்த கடமான், புள்ளி மான்களும் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த மான்கள் இரவு நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு வெளியே வந்து அருகே உள்ள சாலைகளைக் கடந்து அதிகாலை வரை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றித் திரிந்துவிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு திரும்பும். அவ்வாறு ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் மான்கள் கூட்டம் ஒன்று சாலையை கடந்து உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் மலைப்பகுதியில் திரும்பும்போது மூன்று வயதுடைய ஆண் புள்ளி மான் மீது தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த அடையாளாம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது படுகாயமடைந்த புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் விரைந்து வந்து தேசிய நெடுஞ்சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மான் மீது எந்த வாகனம் மோதியது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.