விருதுநகர்: கடலூர் மாவட்டம் திருத்துறையூரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ் (19), ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் சிறு வயதிலேயே உடற்பயிற்சி மீது ஆர்வம் கொண்டவர். உடற்பயிற்சியில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என நினைத்த அவர் அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று (செப்.28) அவர் புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இதுவரை இத்தகைய பயிற்சியில் யாரும் செய்திடாத சாதனையாக 1 நிமிடத்தில் 77 முறை சிட்டப்ஸ் செய்து சாதனை படைத்தார். இந்நிலையில், அவர் நோவா உலக சாதனையில் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
சாதனையை மதிப்பீடு செய்வதற்காக நோவா உலக சாதனை அமைப்பின் இந்திய இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் நடுவர் குரு பிரசாத் வந்திருந்தனர். சிறப்பு விருந்திநராக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கலந்து கொண்டார்.
இதையும் படிங்க:காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை தமிழில் வெளியீடு