கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜயன் என்பவர் திருநெல்வேலியில் உறவினரின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு திருநெல்வேலியிலிருந்து குடும்பத்தோடு கோயம்புத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது விருதுநகர் - மதுரை நெடுஞ்சாலை அருகே இருந்த பிரபலமான ஹோட்டலில் காரை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் சாப்பிடச் சென்றனர்.
சாப்பிட்டு முடித்துவிட்டு காருக்கு திரும்பும்போது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு விஜயன், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின் காரினுள் பார்த்தபோது தங்களது உடைமைகளுடன் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து விஜயன் விருதுநகர் ஊரக காவல் நிலைய காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார். அந்தத் தகவலின்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் ஹோட்டல், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிறுத்திவைக்கப்பட்ட கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை - பர்மா ஹோட்டல்
விருதுநகர்: பட்டப்பகலில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
![நிறுத்திவைக்கப்பட்ட கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை நகைகள் திருட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:34:31:1604153071-tn-vnr-03-theft-vis-script-7204885-31102020184612-3110f-1604150172-996.jpg?imwidth=3840)