ETV Bharat / state

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் கொள்ளை! - வீட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் கொள்ளை

விருதுநகர்: ராஜபாளையம் அருகே ஆலங்குளம் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 60 பவுன் தங்க நகை, ரூ.60,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

gold jewelery
பூட்டியிருந்த வீட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் கொள்ளை!
author img

By

Published : Apr 29, 2021, 1:02 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆலங்குளம் கிராமப் பகுதியில் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை உள்ளதால், இங்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே கலைஞர் நகரில் மாரியம்மாள் (80) என்பவர் குடியிருந்துவருகிறார். இவரது கணவர் குருசாமி தேவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால் மாரியம்மாள் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 27ஆம் தேதி கான்சாபுரம் கிராமத்திற்கு திருவிழாவிற்காக குடும்பத்தினர் அனைவரும் சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று (ஏப். 29) அதிகாலை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து நொறுக்கி, உள்ளே நுழைந்து இரும்பு பீரோவிலிருந்த 60 பவுன் தங்க நகைகள், ரூ.60,000 போன்றவைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

மேலும் அருகிலுள்ள குமாரசாமி என்பவரது வீட்டையும் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் விளக்கைப் போட்டு ஆள்கள் விழித்துக்கொண்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை ஆலங்குளம் வந்த காளியம்மாள் வீட்டை பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது, உள்ளே பீரோ உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

உடனடியாக ஆலங்குளம் காவல் துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் பாலாஜி, சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்பட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கட்டுப்பாடுகளுடன் நடந்த வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.