ETV Bharat / bharat

பெங்களூருவில் மூவர் கொலை: சொந்த குடும்பத்தையே கொலை செய்த நபர் - காரணம் என்ன? - TRIPLE MURDER IN BENGALURU

பெங்களூருவில் மனைவி, பெற்ற மகள் உட்பட மூவரைக் கொலை செய்த நபர் கொலை செய்த ஆயுதத்துடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஜலஹள்ளி கிராஸ் அருகே உள்ள ஒரு வீட்டில், மனைவி மற்றும் இரண்டு மகளை கொலை செய்த கொடூர சம்பவம் நேற்று (ஜன.8) புதன்கிழமை நடந்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதாவது, பெங்களூரு ஹெப்பகோடி பகுதியில் வீட்டு காவலராக பணி புரிந்து வருபவர் கங்கராஜு. இவருக்கு பாக்யம்மா என்ற நபருடன் திருமணமாகி ஒரு மகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்த கங்கராஜூவின் மனைவி பாக்யம்மா (38), மகள் நவ்யா (19) மற்றும் பாக்யம்மாவின் சகோதரியின் மகள் ஹேமாவதி (22) ஆகியோரை, கங்கராஜு கொலை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பிச் சென்ற கங்கராஜு தனது குடும்பத்தினரைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி, கொலை செய்த ஆயுதத்துடன் பீன்யா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும், தற்போது இந்த கொலை குடும்பத் தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உயிரிழந்த நபர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கங்கராஜூவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பதி: இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையத்தில் கூட்ட நெரிசல்: 6 பக்தர்கள் உயிரிழப்பு!

இந்த சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறை கூடுதல் ஆணையர் விகாஸ் குமார் கூறுகையில், "மாலை 5 மணிக்கு 112 என்ற எண்ணில் இருந்து தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹொய்சாலா போலீசார், ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஒரே அறையில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில், இறந்து கிடந்துள்ளனர்.

மேலும், இந்த கொலையை கங்கராஜு என்ற நபர் செய்துள்ளார். இவர்கள் நெலமங்கலா பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், ஹெப்பகோடி பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதுதொடர்பாக கங்கராஜூவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.