சென்னை: இயக்குநர் ஷங்கர் ரஜினியின் பயோபிக் எடுக்க ஆசைப்பவதாக தெரிவித்துள்ளார். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜன.10) வெளியாகிறது.
தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கேம் சேஞ்சர் பட புரமோஷனில் இயக்குநர் ஷங்கர் ’இந்தியன் 2’ விமர்சனங்கள் குறித்தும், தனது எதிர்கால திரைப்படங்கள் குறித்தும் பேசியுள்ளார். கேம் சேஞ்சர் குறித்து ஷங்கர் பேசுகையில், “கரோனா காலத்தில் இந்தியன் 2,3 ஆகிய கதைகளை வைத்திருந்தேன். மேலும் வேள்பாரி கதையை படித்து, அதற்கு திரைக்கதை எழுதி வைத்திருந்தேன்.
Director#Shankar about #GameChanger ⭐:
— Laxmi Kanth (@iammoviebuff007) January 9, 2025
" i like ghilli, dhool, dhill kinda films.. i wanted to do something like that.. #GameChanger will be in that zone & it's a Mass Masala Entertainer..🤝 My Stories can be done by any Mass Hero.. This time, i got a well established hero… pic.twitter.com/qKTaUXtPEN
கரோனா காலத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் கேம் சேஞ்சர் கதையை கூறினார். எனக்கு கில்லி, தூள், தில் போன்ற கமர்ஷியல் படங்கள் பிடிக்கும். அந்த வகையில் கேம் சேஞ்சர் படத்தை மாஸ் மசாலா கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளேன்” என்றார்.
Director #Shankar in a Recent Vikatan Interview ⭐:
— Laxmi Kanth (@iammoviebuff007) January 9, 2025
" if i wanted to make a biopic, i'd do #Rajinikanth sir's Biopic..🔥 He's a Good person & everybody knows that.." pic.twitter.com/i1dkaKGFWt
இதனைத்தொடர்ந்து ஷங்கர் எடுக்க விரும்பும் சுயசரிதை கதைகள் குறித்த கேள்விக்கு, “தற்போது பயோபிக் எடுக்க எந்த ஐடியாவும் இல்லை, அப்படி எடுத்தால் ரஜினி சாரின் பயோபிக்கை தான் எடுக்க வேண்டும். அவர் ரொம்ப நல்ல மனிதர், அனைவருக்கும் தெரிந்தது” என கூறியுள்ளார்.
Director #Shankar about #Indian2 Criticisms ⭐:
— Laxmi Kanth (@iammoviebuff007) January 9, 2025
" criticisms are a must & no one can escape from it.. anybody can criticise anything.. but we just need to take the good criticisms & try to implement them in further projects.." pic.twitter.com/D8I4I7tTRP
இதனைத்தொடர்ந்து கடந்த 2024இல் வெளியான படங்களில் தனக்கு ’லப்பர் பந்து’ படம் மிகவும் பிடித்ததாகவும், தினேஷ், சுவாசிகா ஆகியோரின் நடிப்பு பிரமாதம் எனவும் பாராட்டினார். இந்தியன் 2 படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வெளியான நிலையில், சமூக வலைதள விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு ஷங்கர், “விமர்சனங்களை தவிர்க்க முடியாது, விமர்சனங்களை தாண்டி எவரும் கிடையாது. அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆர்ட் படங்களிலிருந்து வேறுபட்ட பக்கா கமர்ஷியல் படம் - யாஷின் ’டாக்சிக்’ படத்தை இயக்கும் கீது மோகன்தாஸ்! - GEETU MOHANDAS DIRECT YASH
இதனைத்தொடர்ந்து அதிதி ஷங்கர் சினிமா பயணம் குறித்த கேள்விக்கு, “அவருக்கு நல்ல திறமை உள்ளது. அனைவரையும் எண்டர்டெயின் செய்யும் திறமை அவரிடம் உள்ளது என்பது எனக்கு இயக்குநராக தெரிகிறது” என கூறியுள்ளார்.