ETV Bharat / state

இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு - ஜூனத்அகமதுவின் ஜாமீன் மனு தள்ளுபடி! - 22 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுகவைச் சேர்ந்த 2ஆவது நபர் ஜூனத் அகமது ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

ஜூனத்அகமதுவின் ஜாமீன் மனு
ஜூனத்அகமதுவின் ஜாமீன் மனு
author img

By

Published : Apr 26, 2022, 9:52 PM IST

விருதுநகர்: கடந்த மாதம் விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு அதிமுகவினர் சட்டபேரவையில் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை மத்திய சிறை: அதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி, 7 நாட்கள் விசாரணை செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களுக்கு அடுத்த மாதம் மே 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் மீண்டும் மதுரை மத்திய சிறையில் நால்வரையும் அடைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன் மனு: பள்ளி சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் 2ஆவதாக குற்றம்சாட்டப்பட்ட திமுகவைச் சேர்ந்த ஜூனத் அகமது என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன்கோரி, கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

ஜாமீன் மனு தள்ளுபடி: இந்த ஜாமீன் மீதான விசாரணை கடந்த 21ஆம் தேதி வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வழக்கை ஏப்.26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன் படி, இன்று (ஏப்.26) விசாரணைக்கு வந்த ஜூனத் அகமதுவின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில், அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.