விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (52). அவர் மனைவி ஜானகி (45), மகள் ராஜேஸ்வரி (26), மகன் செல்வம் (25) ஆகியோருடன் வசித்துவந்தார். அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் ஜூன் 28ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டிலிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
அதனால் குடும்பத்தினர் அவரை இழுத்துச் சென்று தூங்கவைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவரை எழுப்புகையில் அவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
அதையடுத்து அவர்கள் உடனே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்துவந்த சாத்தூர் நகர காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து அவருடைய குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: தொழிலாளி உயிரிழப்பு :உறவினர்கள் சாலை மறியல்