விழுப்புரம் மாவட்டம் வானூர், பூத்துறை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்துவருகின்றனர். கரோனா காரணாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மாவட்ட இளைஞர்கள் சிலர் உதவ திட்டமிட்டனர்.
அதன்படி இன்று(நவ.14) தீபாவளியை முன்னிட்டு, அவர்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வழங்கி கொண்டாடினர். அத்துடன் பழங்குடி இன மக்களுக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது. இளைஞர்களின் இந்தச் செயலை பலரும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: நடமாடும் நியாயவிலைக் கடை: பழங்குடி மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்த அரசு!