ETV Bharat / state

லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! - vilupuram

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவியரசன்
author img

By

Published : Aug 11, 2019, 9:25 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே எரவளம் கிராமத்தைச் சேர்ந்த எழுமலையின் மகன் கவியரசன்(20). இவர் எரவலத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் மணல் அல்லுவதையும், அவர்களிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணம் பெறுவதையும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த மணல் ஏற்றி வந்த சிலர் கவியரசனை அடித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதனால் மனமுடைந்த கவியரசன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர், கவியரசன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அனுமதியில்லாமல் உடலை கைப்பற்றியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் செயல்படுவதாகக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் மேற்கொண்ட நீண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Intro:விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Body:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் எரவளம். இந்த கிராமத்தில் உள்ள எழுமலையின் மகன் கவியரசன்(20).

இவர் நேற்று எரவலத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் மணல் அல்லுவதையும், மண் அல்லியவர்களிடம் அந்த கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணம் பெறுவதையும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீடியோ எடுத்த இளைஞரை மணல் ஏற்றி வந்த சிலர் அடித்து அவர் வைத்திருந்த செல்போனை பரித்து சென்றதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த கவியரசன் தமது வீட்டில் வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் இது குறித்து திருக்கோவிலூர் போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கவியரசன் சடலத்தை திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனையில் இருந்த கவியரசனின் உடலை, அவரது உறவினர் இல்லாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு போலிசார் அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி திருக்கோவிலூர் முக்கிய சாலையான நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சாலை மறியல் கைவிட பட்டது.

.

Conclusion:இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.