வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு...! - Vilupuram
விழுப்புரம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் 3,227 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு மற்றும் கலை கல்லூரி அறைகளில் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டன.
இதையடுத்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தொடர்ந்து வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Body:தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 3,227 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு பெட்டிகள் தேர்தல் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு மற்றும் கலை கல்லூரி அறைகளில் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Conclusion:தொடர்ந்து வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.