உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அண்மையில் அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டும் விழுப்புரத்தில் இன்று(அக்.8) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் பதவிவிலக கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: