ETV Bharat / bharat

'108' ஆம்புலன்சில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சகோதரி உடந்தை.. நள்ளிரவில் பயங்கரம்! - GIRL RAPED IN AMBULANCE

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்சில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சாலையில் விட்டு சென்ற சம்பவம் அதிர வைத்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 9:38 AM IST

மௌகஞ்ச்: மத்தியப் பிரதேச மாநிலம், மௌகஞ்ச் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று, 16 வயது சிறுமி, அவரது சகோதரி, சகோதரியின் கணவர் மூவரும் அந்த ஆம்புலன்சில் பயணித்துள்ளனர். ஆனால், இவர்கள் யாருமே நோயாளிகள் இல்லை என்று மௌகஞ்ச் காவல்துறை கூறுகிறது.

மேலும், இவர்களுடன் ஓட்டுனரின் கூட்டாளி ஒருவரும் இருந்துள்ளார். இந்த நிலையில், ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட தூரம் வரை சென்றதும் நின்றுள்ளது. அப்போது சிறுமியின் சகோதரியும், அவரது கணவரும் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என சொல்லி, ஆம்புலன்சில் இருந்து இறங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் திரும்ப வரும் வரை காத்திருக்காமல் அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

அதன் பின்னர், ஓட்டுனரின் கூட்டாளியான ராஜேஷ் கேவாட் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அன்று இரவு முதல் சிறுமியை தங்களது கட்டுபாட்டிலே வைத்திருந்துவிட்டு, மறுநாள் காலையில் சாலையோரமாக அவரை விட்டு சென்றுள்ளனர். சோர்வான நிலையில் வீட்டுக்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்ததை கதறியபடி தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால், வெளியில் சொன்னால் மானம் போய்விடுமோ என்ற பயத்தில், சிறுமியின் தாய் அந்த விஷயத்தை மறைத்துள்ளார்.

இதையும் படிங்க: காதலியை 50 துண்டுகளாக வெட்டிய கறிக்கடை தொழிலாளி.. கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை.. பதறும் க்ரைம் சீன்!

பின்னர் நடந்தவற்றை குறித்து மௌகஞ்ச் காவல்துறை அதிகாரி சாகேத் பாண்டே கூறுகையில், சிறுமியின் சகோதரிக்கும், அவரது கணவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரேந்திர சதுர்வேதிக்கும் இவர்களுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. வேண்டுமென்றேதான் அவர்கள் சிறுமியை ஆம்புலன்ஸிலேயே விட்டு சென்றுள்ளனர். அது தெரியாமல் ஆம்புலன்சில் தனியாக இருந்த சிறுமி மீது ஓட்டுனரின் கூட்டாளி ராஜேஷ் கேவாட் பாலியல் அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறார்.

தொடக்கத்தில் இதுகுறித்து மவுனம் காத்து வந்த சிறுமியின் தாய் கடந்த 25 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பிறகு போக்சோ வழக்கில் ஓட்டுநர் ராஜேஷ் கேவாட் மற்றும் டிரைவர் வீரேந்திர சதுர்வேதி இருவரையும் கைது செய்துள்ளோம் என்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவரையும் கைது செய்ய தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

வட மாநிலங்களில் பல வகையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், 108 அவசர சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்சில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.