ETV Bharat / state

திருநெல்வேலி - ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில்: நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படுமா? - SOUTHERN RAILWAY

திருநெல்வேலி - கொல்கத்தா ஷாலிமார் வரை செல்லும் சிறப்பு ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்க கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 9:59 AM IST

Updated : Nov 29, 2024, 11:27 AM IST

கன்னியாகுமரி: திருநெல்வேலியில் இருந்து வாரம் ஒரு முறை மேற்குவங்க மாநிலத்தின் ஷாலிமாருக்கு (Tirunelveli - Shalimar) செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலை, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, தெற்கு ரயில்வே திருநெல்வேலியிலிருந்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், விஜயவாடா வழியாக மேற்குவங்கத்தின் தலைநகர் ஷாலிமாருக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்து இயக்கி வருகிறது. இந்த ரயில் 2 முறை நீட்டிப்பு செய்து தொடர்ந்து சிறப்பு ரயிலாக இயங்கி வருகின்றது.

தென்னக ரயில்கள்
தென்னக ரயில்கள் (ETV Bharat Tamil Nadu)

இந்த ரயிலின் அறிவிப்பு காலம் முடிந்த பிறகு, மீண்டும் சிறப்பு ரயிலாக அறிவித்து தொடர்ந்து இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கன்னியாகுமரியிலிருந்து ஹவுராவுக்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. இந்த ரயில் 2003ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, இதுவரை வாராந்திர ரயில் சேவையாகவே இயக்கப்பட்டு வருகிறது.

அமித் பாரத் ரயில்: தென்மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் கிழக்கு பகுதி மாநிலங்களுக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது திருநெல்வேலியிருந்து ஷாலிமாருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்தான், அமித் பாரத் ரயில் பெட்டிகள் வந்த பிறகு அமித் பாரத் ரயிலாக இயக்கப்பட இருக்கின்றது. இது ரயில்வே துறையின் திட்டம் ஆகும். இந்த ரயிலில் 13 ஏசி பெட்டிகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் இந்த ரயில் சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படுவதால் தென்மாவட்ட பயணிகள் மாநில தலைநகருக்குச் செல்ல வாராந்திர ரயில் சேவை கூடுதலாகக் கிடைக்கும்.

திருவண்ணாமலை ரயில் இணைப்பு:

இந்திய ரயில்கள் - கோப்புப் படம்
இந்திய ரயில்கள் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நேரடியாக திருவண்ணாமலைக்குச் செல்ல எந்த ஒரு ரயில் சேவையும் தற்போது இல்லை. ஆனால் திருநெல்வேலி - திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயிலையும் சேர்த்து வாரத்துக்கு மூன்று ரயில் சேவை உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட இருப்புப் பாதைகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ளதால்தான், தமிழ்நாடு வழியாக பயணிக்கும் இதுபோன்ற ரயில்கள் மதுரை கோட்டத்தில் உள்ள திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி – மதுரை - ஹவுரா மார்க்கம் சராசரி பயணிகள் நெருக்கடி அல்லது பயணிகள் பயன்பாடு (Occupancy):

  • இரண்டடுக்கு ஏசி – 183 %
  • மூன்றடுக்கு ஏசி -162 %
  • இரண்டாம் வகுப்பு படுக்கை -196 %
    மொத்தம் - 184 %

இதையும் படிங்க: நாகர்கோவில் டூ மதுரை வழியாக கோவைக்கு ஜனசதாப்தி சிறப்பு ரயில் - பயணிகள் கோரிக்கை!

மறுமார்க்கமாக பயணிகள் பயன்பாடு (occupancy):-

  • இரண்டு அடுக்கு ஏசி - 164%
  • மூன்றடுக்கு ஏசி -134 %
  • இரண்டாம்வகுப்பு படுக்கை -183%
    மொத்தம் - 166 %

நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர ரயில்:

நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர் மார்க்கமாக ஷாலிமாருக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கேரளா வழியாகச் சுற்றி செல்வதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு இல்லை. இதில் கேரளாவைச் சார்ந்த பயணிகள் மட்டுமே பயணம் செய்கிறார்கள்.

ஆகவே, திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர ரயிலை நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து விட்டு, அதற்குப் பதிலாக நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை திருவனந்தபுரத்துடன் நிரந்தரமாக நிறுத்தி விடலாம். இவ்வாறு செய்யும் போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள இடநெருக்கடி வெகுவாக குறையும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 29, 2024, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.