ETV Bharat / entertainment

ஓவர்நைட்டில் சம்பவம் செய்த அஜித்...3 மில்லியனை தாண்டி சாதனை படைக்கும் 'விடாமுயற்சி' டீசர்! - VIDAAMUYARCHI TEASER RECORDS

Vidaamuyarchi teaser: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் யூடியூபில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

விடாமுயற்சி போஸ்டர்
விடாமுயற்சி போஸ்டர் (Credits - @LycaProductions X page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 29, 2024, 10:16 AM IST

சென்னை: அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’ படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு சமீபத்தில் அசர்பைஜானில் முடிவடைந்தது.

இதனிடயே அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பும் வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் துணிவு திரைப்படம் வெளியானது அதற்கு பிறகு இரு படங்களில் அஜித் ஒரே சமயத்தில் நடித்து வந்தாலும் பெரிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

குட் பேட் அக்லி திரைப்படம் அறிவிக்கப்பட்ட போதே 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிப் போனது. விடாமுயற்சி பட போஸ்டர்கள் மட்டும் வெளியிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் பொங்கலுக்கு விடாமுயற்சியா அல்லது குட் பேட் அக்லியா என குழப்பத்தில் இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு சர்ப்ரைஸாக விடாமுயற்சி டீசர் ரிலீசானது.

அதில் 2025 பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி டீசரை பார்த்த குஷியில் உள்ளனர். விடாமுயற்சி பயணம் தொடர்பான கதை என கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு கிட்டதட்ட அசர்பைஜானில் நடைபெற்றது. இந்த டீசரின் மூலம் தனது காதலி அல்லது மனைவி த்ரிஷாவை அஜித் தொலைத்து விட்டு தேடுவது போல கதை அமைந்திருக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு விடிவுகாலம்.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த படத்தில் அர்ஜூன் அல்லது ஆரவ் வில்லனாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. இந்த டீசரில் ஒரு வசனம் கூட எவரும் பேசாதது தனித்துவமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கதையின் சிறியதாக கூறும் வண்ணம் ‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு’ என கூறப்பட்டுள்ளது. இது அஜித் தனது ரசிகர்களுக்கு கூறுவது போல் அமைந்துள்ளது. விடாமுயற்சி டீசர் தற்போது யூடியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. பொங்கலுக்கு கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார், அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.