வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் பணிக்கொடை என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் முதலமைச்சர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் படிக்க: ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால், சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு