விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலதாசு. கார் ஓட்டுநரான இவர், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் அருகே காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற TN 31 N 4123 என்ற பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து கோகுலதாசுவின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கோகுலதாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கோகுலதாசுவின் மனைவி மோகனப்பிரியா, விபத்து தொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.