ETV Bharat / state

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் பற்றிய சிறப்பு தொகுப்பு - அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக முத்தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

vikravandi-admk-candidate-muthamizselvan-profile
author img

By

Published : Sep 25, 2019, 7:19 PM IST

தமிழ்நாட்டில் காலியாக இருந்துவரும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தியை அக்கட்சி தலைமை நேற்று அறிவித்தது. இதையடுத்து, திமுகவின் நேரடி அரசியல் எதிரியான அதிமுகவும் தற்போது தனது வேட்பாளரை அறிமுகம் செய்திருக்கிறது. அதிமுக வேட்பாளராக விழுப்புரம் கானை பகுதி ஒன்றிய கழக செயலாளர் முத்தமிழ்செல்வனை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

vikravandi-admk-candidate-muthamizselvan-profile
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்

யார் இந்த முத்தமிழ்ச்செல்வன்?

விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் ரங்கநாதன்- இந்திரா தம்பதியருக்கு 1965ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். இவரது மனைவி அமுதா. இவருக்கு பிரபாகரன் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.

இவரது தாய் 1985 முதல் 1991 வரை கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இதேபோல் இவரது தந்தை 2006 முதல் 2011 வரை கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார்.

முத்தமிழ்ச்செல்வன் கானை ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் கல்பட்டு கிளைக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் 2011 முதல் 2016 வரை கானை ஒன்றிய துணை பெருந்தலைவர் ஆகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

பல்வேறு காலகட்டங்களில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று நான்கு முறை சிறை சென்றுள்ளார்.

இவரது கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகவும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கி வரும் முத்தமிழ்ச்செல்வனுக்கு தற்போது அதிமுக சார்பில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க...

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி பற்றிய சிறப்பு தொகுப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக முத்தமிழ்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்தத் தேர்தலுக்கான நேர்காணல் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அக்கட்சியின் தலைமை சென்னையில் இன்று அறிவித்தது.

அதன்படி விழுப்புரம் அருகே உள்ள காணை பகுதி ஒன்றிய கழக செயலாளராக இருக்கும் முத்தமிழ்ச் செல்வன் அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த முத்தமிழ்ச்செல்வன்?

விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் ரங்கநாதன்- இந்திரா தம்பதியருக்கு 1965ம் ஆண்டு மகனாக பிறந்தார். இவரது மனைவி அமுதா.(அண்மையில் இறந்துவிட்டார்). இவருக்கு பிரபாகரன் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.

இவரது தாய் 1985 முதல் 1991 வரை கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இதேபோல் இவரது தந்தை 2006 முதல் 2011 வரை கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியுள்ளார்.

இவர் 1997 முதல் 2015 வரை அம்மா பேரவை,  
காணை ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் கல்பட்டு கிளைக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் 2011 முதல் 2016 வரை காணை ஒன்றிய துணை பெருந்தலைவர் ஆகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

பல்வேறு காலகட்டங்களில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று நான்கு முறை சிறை சென்றுள்ளார். 

இவரது கடின உழைப்புக்கு பலனாகவும், மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இவர் மீது வைத்துள்ள நம்பிக்கையின் பாத்திரமாகவும் தற்போது அதிமுக சார்பில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு முத்தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.